பா.ஜ.க. அரசை நம் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் : உதயநிதி ஸ்டாலின் தெரிவிப்பு.

இஸ்லாமியர்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லும் பா.ஜ.க. அரசை நம் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் எனத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை ஆர்.கே.நகர் டி.எச்.ரோடு கலைஞர் திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ஜே.ஜே.எபினேசர் தலைமை தாங்கினார்.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் 40 பேருக்கு தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சமூகநீதி கொள்கையில் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் திகழ்ந்து வருகின்றார். பா.ஜ.க அரசை நாம் எதிர்க்க வேண்டும். இஸ்லாமியர்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லும் பா.ஜ.க. அரசை நம் நாட்டை விட்டு விரட்ட வேண்டும். என அவர் தெரிவித்தார்.