அரசாங்கத்தின் நோக்கம் குறித்து  தென்னிலங்கை அரசியல் கட்சிகள் சந்தேகம்.


யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் உடனடியாகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்திருக்கவேண்டும்.இருப்பினும் தாமதமாகவேனும் இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள தென்னிலங்கை அரசியல் கட்சிகள்.

இருப்பினும் இதன் பின்னணியிலுள்ள அரசாங்கத்தின் நோக்கம் குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன.மூன்று தசாப்தகாலமாக நாட்டில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போது பதிவான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுத்து நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகம் இலங்கையைத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டதையொத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.அரசாங்கத்தின் காலம் கடந்த இம்முயற்சியை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள தென்னிலங்கை அரசியல் கட்சிகள் இருப்பினும் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் குறித்தும் இதனூடாக அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் பெறுபேறு கிட்டுமா என்பது குறித்தும் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் விளைவாகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது என்ற போதிலும், இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்ற பயன் கிட்டுவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.