இலங்கையில் சீனாவின் ராடர் தளம்: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுப்பு

இலங்கையில் சீனாவின் ராடர் தளத்திற்கு  அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியான தகவல்களை  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.இலங்கையில் சீனா ராடார் தளத்தினை அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம்வழங்கியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களிற்கு மத்தியில் அவ்வாறான வேண்டுகோள்கள் எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் அவ்வாறான அனுமதி எதனையும் வழங்கவில்லை  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தென்பகுதியில் தெய்வேந்திர முனையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சீனா புதியதொரு ராடர் தளத்தை நிறுவ முனைவதான செய்திகள் சிறிலங்காவின் உளவுத்துறையின் ஆதாரங்களின் அடிப்படையில்  தகவல்கள் கிடைகக்கப்பெற்றதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டரர்.