“என் மகளின் பெயரை யாரும் வைக்க கூடாது”.. வைத்தால் மரணம் தான்-கிம் ஜாங் உன்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகின் கட்டுப்பாடும் நிறைந்த மர்ம தேசம் வடகொரியா. வடகொரியாவில் அரசின் தணிக்கைக்கு பிறகே செய்திகள் வெளியாகும்.

குறிப்பாக அந்நாட்டு மக்கள் பிற நாடுகளில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வினோத தடை விதித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தனது மகளை அவர் பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். தற்போது தன் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து செய்வதறியாத வடகொரியா மக்கள் திகைத்து வருகின்றனர். பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள். மூத்த மகனை விட மகள் மீதே அதிகம் பாசம் கொண்டவர் கிம் ஜாங் உன் என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரியா மக்கள் தொகை 2.6. கிம் பெயர் கொண்டர்கள் சுமார் 1 கோடி என கூறப்படுகிறது.