ஓட்டோ புயல் நாளை அதிகாலை பிரித்தானியாவை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

ஓட்டோ புயல்  இங்கிலாந்தின் வடகிழக்கு கடற்கரை மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பகுதியை பாதிக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை அலுவலகத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் ஆண்டி பேஜ் கூறுகையில்,

ஓட்டோ புயல் இங்கிலாந்தில் அதிக காற்றையும் மழையையும் கொண்டு வரும் ஸ்காட்லாந்தின் சில வடக்குப் பகுதிகள் மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளில் 75 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பயண இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதுடன், மேற்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் 40-50 மிமீ மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.