இலங்கை பெறவுள்ள கடன் தொகைக்கான நிதி உத்தரவாதத்தை வழங்க பாரிஸ் கிளப் நடவடிக்கை.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெறவுள்ள கடன் தொகைக்கான நிதி உத்தரவாதத்தை வழங்க பாரிஸ் கிளப் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுக்கான உத்தரவாதத்தை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் என 22 நாடுகளின் கூட்டு அமைப்பான பாரிஸ் கிளப், கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நாடுகளுக்கு நிவாரணங்களை வழங்கிவருகின்றது.

கடந்த காலங்களில் பாரிஸ் குழும நாடுகள் முக்கிய கடன் வழங்குநர்களாக இருந்தன, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சீனா மிகப்பெரிய கடன் வழங்குநராக மாறியுள்ளது.

இலங்கையின் இருதரப்புக் கடன் வழங்கும் பெரிய நாடுகளாக சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் இலங்கைக்கு நிதி உத்தரவாதத்தை வழங்குவதாக இந்தியா அறிவித்ததோடு ஏனைய நாடுகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.