தமிழரசு கட்சியின் வெற்றிக்கான ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உறுதி செய்ய வேண்டும்-எம்.ஏ சுமந்திரன்

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் கடந்த காலங்களில் வழங்கிய ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உணர்த்த வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற இலங்கை தமிரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தெற்கில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் கடந்த காலத்தில் வழங்கிய தமிழரசு கட்சியின் வெற்றிக்கான ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.