கடன் கேட்டு பிச்சை எடுக்கும் இந்த  வேளையில் கொண்டாடப்படுகின்ற சுதந்திரத்திற்கு என்ன பெருமையுள்ளது.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

சர்வதேசத்திடம் கடன் கேட்டு பிச்சை எடுக்கும் இந்த  வேளையில் கொண்டாடப்படுகின்ற சுதந்திரத்திற்கு என்ன பெருமையுள்ளதென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்கத்தவறியமையே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் இலங்கைச் சமூகம் இன்று பாரியளவில் சீரழிந்துள்ளது.

கடந்த 75 வருடங்களாக நாம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். இதுவே இந்நாட்டின் நிலை. இலங்கை பொருளாதார ரீதியாக மட்டுமன்றி சகல அம்சங்களிலும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மக்கள் நீதியையும் நியாயத்தையும் மறந்துவிட்டார்கள். தங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லாமே செய்யப்படுகின்றன.

திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தையும் இறக்குமதி செய்து வாழ்வாதாரப் பொருளாதாரமாக மாறிவிட்டோம்.- என்றார்.