75வது சுதந்திர தின விழாவுக்கு ஹிருணிகா பிரேமச்சந்திர கறுப்புப் பட்டி எதிர்ப்பு.

அரசு ஏற்பாடு செய்துள்ள 75வது சுதந்திர தின விழாவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று தனது எதிர்ப்பை வெளியிட்டார்.சமூக வலைதளங்களில் நேரலை காணொளி மூலம் வந்த ஹிருணிகா,சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் பல்வேறு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் போன்ற பல செலவினங்களைச் சமாளிக்க முடியாத நிலையிலேயே இவ்வாறான நிர்மாணங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஹிருணிகா சுட்டிக்காட்டினார்.காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சுதந்திர நிகழ்வுகளுக்கான மேடையில் கறுப்புப் பட்டிகளை அணிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த இடத்துக்கு வந்த பொலிஸார், தேசிய நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில் இவ்வாறு செயற்பட முடியாதெனக் கூறி அங்கிருந்து ஹிருணிகாவை அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால், பொலிஸாருடன் ஹிருணிகா கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. பொதுமக்கள் இந்த இடத்துக்கு வருகைத்தந்து கறுப்புப் பட்டிகளை அணிவித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் இதன்போது கேட்டுகொண்டார்.