மஹிந்த, கோட்டாவிற்கு எதிராக கனடாவின் பொருளாதாரத் தடைகளை, ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடாவின் பொருளாதாரத் தடைகளை, ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கையின் மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறும். சர்வதேச அரசாங்கங்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.