ஆளுநரின் செயலுக்கு கமல்ஹாசன் கண்டனம்.

ஆளுநரின் செயல், சட்டமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயல் என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று தொடங்கிய சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை, இதனால் பேரவையில் ஆளுநருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டார்.

ஆளுநரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய மக்கள் நீதிமய்யம் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தேசிய கீதம் இசைக்கும் முன்பே, சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநரின் செயல், சட்டமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் கண்டனத்திற்குரிய செயல் என தெரிவித்துள்ளார்.