பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்படவுள்ள குழந்தைகள்.

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 9,300 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக போசாக்கு நிலையை குறைப்பதற்காக இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு போசாக்கு பைகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாகவே குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போசாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இம்மாவட்டத்தில் 1457 கர்ப்பிணித் தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உணவுப் பற்றாக்குறையால் ஊட்டச்சத்து குறைபாடு படிப்படியாக உருவாகும் என்றும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது குழந்தைகளில் வளர்ச்சி குறைபாட்டை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.