ஜேர்மனியில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.

ஜேர்மனியில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஜேர்மன் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.ஜேர்மனியின் குளிர்காலத் தேவைக்காக 20 சதவிகிதம் அளவுக்கு எரிவாயுவை சேமிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 13 சதவிகிதம் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளதாக துறை சார் அதிகாரியாகிய கால் முலர்   தெரிவித்துள்ளார்.

தனது எரிவாயுத் தேவைக்காக ஜேர்மனி ரஷ்யாவை பெருமளவில் சார்ந்திருந்த நிலையில், உக்ரைன் போரைத் தொடர்ந்து உருவான பிரச்சினைகளால் ஜேர்மனியை ரஷ்யா கைவிட்டது. ரஷ்யா கைவிட்ட நிலையில், ஜேர்மனி மாற்றுத் திட்டங்களை அமுல்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அப்படி எந்த திட்டமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.

ஆகவே, ஜேர்மனியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது. ஆனால், இப்போதைக்கு ஜேர்மனியின் எரிவாயு கலன்கள் 95 சதவிகிதம் நிறைந்திருப்பதாகவும், ஜேர்மனி திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான தனது முதல் மிதக்கும் முனையத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், பல இடங்களிலிருந்து எரிவாயுவைப் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ள 5லர்  நோர்வே, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாகவும் எரிவாயுவை பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.