உலகின் செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கைப் பெண்!

2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார்.

அரசியல், அறிவியல், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் இலக்கியம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கி, உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை  பிபிசி வெளியிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட புலனாய்வு ஊடகவியலாளரும் மற்றும் கேலிச்சித்திர கலைஞருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்.

இலங்கையில் காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட பணிகளுக்காக அவர் பல பாராட்டுக்களைப் பெற்றதுடன், மனித உரிமைகளுக்காகஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பல அறிக்கைகளை சந்தியா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.