இலங்கையில் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கும் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு- யுனிசெவ் அறிக்கை.

2022 இல் சிறுவர் பாதுகாப்பு விவகாரங்கள் அதிகரித்துள்ளன குறிப்பாக  கிராம மற்றும் மலையகப்பகுதிகளில் அவை அதிகரித்துள்ளன என யுனிசெவ் தெரிவித்துள்ளது.சிறுவர்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றனர், அதிகரிக்கும் உணவுப்பாதுகாப்பின்மை வறுமை உள்நாட்டு வெளிநாட்டு தொழில் புலம்பெயர்வு போன்றவற்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கின்றனர் என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

இலங்கை 2023ம் ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் மோசமான பொருளாதார நெருக்கடியின் பிடியில் உள்ளது 2.9 மில்லியன் சிறுவர்கள் உட்பட 6.2 மில்லியன் இலங்கையர்களிற்கு 2023 இல் மனிதாபிமான உதவி அவசரமாக தேவைப்படுகின்றது எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.அதிகரிக்கும் பணவீக்கம் அதிகரிக்கும் வருமான பாதுகாப்பின்மை அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

2002 முழுவதும் தொடர்ச்சியான அடிக்கடி ஏற்பட்ட இயற்கை அழிவுகள் விவசாய துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விளைச்சலை அழித்தன எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.கடந்த வருடங்களை உணவு உற்பத்தியில்  40 வீத வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரை உணவுபாதுகாப்பின்மை மேலும் மோசமடையும் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.5.3 மில்லியன் மக்கள் ஏற்கனவே உணவுகளை தவிர்க்கின்றனர் இது எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.