ஓபிஎஸ் அணியை தவிர்த்து இபிஎஸ்க்கு மத்திய அரசு அழைப்பு.

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியை விட்டு விட்டு இபிஎஸ்க்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில்  ஜிபு-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும், பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜி-20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றிபெற்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெருமையும், மகிழ்ச்சியும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் இன்று  நடைபெறவுள்ள ஜி-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.