FIFA-3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது கானா.

கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் எச் பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் கொரியா-கானா அணிகள் மோதின. இந்த போட்டியில் கானா அணி சார்பில் முகமது சாலிசு ஆட்டத்தின் 24-வது நிமிடத்திலும் முகமது குதுஸ் 34-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனால் முதல் பாதியில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தென் கொரியா அணியின் சோ கு சங் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில், ஆட்ட நேர முடிவில் கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.