அமெரிக்க ‘Gay’ கிளப்பில் துப்பாக்கிச்சூடு -5 பேர் பலி.

அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில் உள்ள கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் கே நைட் கிளப் ஒன்று உள்ளது. இந்த நைட் கிளப்பிற்குள் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5- பேர் பலியானதாகவும் 18 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 20 ஆம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் ( TDOR) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கே நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. காயம் அடைந்தவர்களை மீட்டு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் அந்த நைட் கிளப் அமைந்து இருக்கும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது