ஜனாதிபதி ரணில் வன்னிக்கு விஜயம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார்.

இன்று (19) காலை 9 மணிக்கு வருகை தந்த ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம் , பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.