வானுடன் மோட்டார் சைக்கில் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதியின் 222 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று (17) மாலை வானுடன் மோட்டார் சைக்கில் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரே உயிரிழந்துள்ளார்.
மாங்குளம் நகரில் உள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றி வருகின்ற 21 வயதுடைய சாள்ஸ் வினேத் என்ற ஊழியர் பணிமுடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.