இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய அவுஸ்திரேலிய பெண் ,  100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணங்காத காரணத்தினால் உரிய தொகையை 25,000 அவுஸ்திரேலிய டொலர்களாக குறைக்க குறித்த பெண் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களுடன் ‘டேட்டிங் ஆப்’ மூலம் இதுபோன்ற இளம்பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், இவ்வாறு பணம் சம்பாதிப்பதும் வழக்கமாக இருப்பதும், ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற குழுக்கள் அதிகம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவின் வழக்கும் அவ்வாறானதனால் சட்டத்தின் ஊடாகவே அதனை எதிர்கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தற்போது தனுஷ்க குணதிலக்க சிறையில் இருப்பதாகவும் அவுஸ்திரேலியாவின் சட்ட விவகாரம் முடிவடைய 10 மாதங்களுக்கு மேலாகும் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.