ஓபிசி விரோத சதிச்செயலில் உருவானதுதான் பொருளாதார அளவுகோலில் இடஒதுக்கீட்டு சட்டம்.

அநீதியை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசியினருக்கு உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10வீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் 10வீத இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் 10 வீத  இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தீர்ப்பு வழங்கினர்.

பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10 வீத இடஒதுக்கீடு உறுதியானது. இதுகுறித்து திருமாவளவன் , ஓபிசி விரோத சதிச்செயலில் உருவானதுதான் பொருளாதார அளவுகோலில் இடஒதுக்கீட்டு சட்டம்; அநீதியை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசியினருக்கு உள்ளது. சங்பரிவார் சதி திட்டத்தை ஓபிசி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.