ஒயில் மூலம் வீட்டை வெப்பமூட்டும் குடும்பங்களுக்கு உதவித் தொகை 100-200 ஈரோக்கள் கிடைக்கும்.

Kumarathasan Karthigesu

157

எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை இந்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளது. ஒயில் மூலம் வெப்பமூட்டப்படும் வீடுகளில் வசிக்கின்ற வருமானம் குறைந்த குடும்பங்களுக்கே நூறு ஈரோ முதல் 200 ஈரோக்கள் வரை கொடுப்பனவு கிடைக்கவுள்ளது.

10ஆயிரத்து 800 ஈரோக்களுக்கு குறைந்த வருட வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 200 ஈரோ எரிசக்தி காசோலையும்,(chèque énergie) 10 ஆயிரத்து 800 முதல் 20 ஆயிரம் ஈரோக்கள் வரையான வருட வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களுக்கு 100 ஈரோக்கள் காசோலையும் வழங்கப்படவுள்ளது.

இந்தக் காசோலைகள்(chèque énergie) ஒரு வருடங்கள் செல்லுபடியாகும். இந்த விவரங்கள் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. வீடுகளில் எரிபொருள் மூலம் சூடேற்றும் கருவிகளைப் (boilers) பயன்படுத்துகின்ற 2.8 மில்லியன் குடும்பங்களில் சுமார் 1.4 மில்லியன் குடும்பங்கள் இந்த உதவிக் கொடுப்பனவைப் பெறவுள்ளன.