முதல்முறையாக காந்தி – நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்வு.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி  நடைபெற்று முடிந்த நிலையில்,  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, மல்லிகார்ஜுனே கார்கே தான் வெற்றி பெறுவார் என கூறப்பட்டிருந்தது.  சசிதரூர் 1072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து மல்லிகார்ஜுன கார்கே  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியுமே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில், முதல்முறையாக காந்தி – நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.