• Wednesday, November 29, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

டி20 உலகக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி

By Editor On Oct 17, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
OM SHAKTHI

SUPPORT TO MEIVELI

8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சயில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ஓட்டங்களையும் , சுரி 12 ஓட்டங்களையும் குவித்தார். 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது.

அதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக 18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை மட்டுமே சேர்ந்ததது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் 23 ஓட்டங்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் பாஸ் தி லீடே (14 ஓட்டங்கள் ) கோலின் அக்கர்மன் (17 ஓட்டங்கள் ) டாம் கூப்பர் (8 ஓட்டங்கள் ) அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 13.3 ஓவர்களில் 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பின்னர் கப்டன் எட்வர்ட்ஸ்- டிம் பிரிங்கிள் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல, பிரிங்கிள் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பின்னர் வான் பீக் களமிறங்கினார்.

போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட 1 பந்து மீதம் இருக்கையில் நெதர்லாந்து அணி 112 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் கப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Prev Post

ஆசிய சம்பியன் இலங்கையை வீழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நமிபியா

Next Post

இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்காவுக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ சேர்ப்பு

© 2023 - Meiveli. All Rights Reserved.