சாவகச்சேரி பகுதியில் 7 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை கைது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது

5 நாள்களுக்கு முன்னர் அவர் தனது 7 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளாரென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆபாச காணொளிகளை வற்புறுத்தி காண்பித்தே அவர் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை  இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜராக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.