காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை பாதிக்கப்படும் ஆபத்துள்ளது-எரிக்சொல்ஹெய்ம்.

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை பாதிக்கப்படும் ஆபத்துள்ளதாக  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை காலநிலை மாற்றத்தினால் பாதிப்படையக்கூடிய சூழ்நிலை உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் வடக்கின் உயர் வலயங்கள் மேலும் வறண்டதாகவும் ஈரமான பகுதிகள் மேலும் ஈரப்பதமானதாகவும் காணப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் மண்சரிவு மோசமான காலநிலை மாற்ற பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் காலநிலை மாற்;றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒழுக்கமான நடுத்தர வாழ்க்கைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனக்கு அழைப்பு விடுத்தார் தனது காலநிலை விவகாரங்களிற்கான ஆலோசகராக செயற்படுமாறு கோரினார் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை பசுமையான பாதையை தேடிக்கண்டுபிடிப்பதற்கு உதவ தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மீள்சுழற்சி வலுச்சக்தி மின்சார உற்பத்தி மரங்களை வளர்த்தல் பசுமை விவசாயம் இயற்கை சுற்றுலா வேலைவாய்ப்புகளிற்கான பெருமளவு சந்தர்ப்பங்களை வழங்குகின்றன அதேவேளை இயற்கையை பராமரிக்க முடியும் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை செழிப்புமிக்க புலமை பாரம்பரியத்தை கொண்டுள்ளது காலநிலை மாற்றத்திற்கான தளமாக இலங்கை காணப்படமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.