பேராதனை பல்கலைக்கழத்தில் காணாமல் போன மாணவர் தொடர்பில் எவ்விதத் தகவலும் இல்லை
பேராதனை பல்கலைக்கழத்தின் பொறியியல் பீடத்தில் கல்விகற்று வந்த நிலையில் காணாமல் போன மாணவர் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கடவத்தை கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு, அந்தப் பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா தொற்றுப்பரவலுக்கு பின்னரான நிலைமை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாமல் பல்கலைக்கழக மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகாத வகையில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு விரிவுரையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.