ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், 50க்கும் அதிகமான இராணுவ அதிகாரிகளின் பெயர்கள்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், ஐம்பதிற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.

இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் சர்வதேச நாடுகளில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும் எனவும் சுட்டிகாட்டினார்.அத்துடன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் விமல் வீரவன்ச எம்.பி குறிப்பிட்டார்.

ஆகவே இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை பாதுகாக்கும் விதமாக அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.ஒருவேளை அவ்வாறு நடவடிக்கை எடுக்காது போனால் இந்த நாட்டை காப்பாற்ற முன்வந்த இராணுவ வீரர்களுக்கு அநியாயம் நிகழும் எனவும் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.