2வது டி20 – மேற்கிந்தியஅணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சயில் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – கீரின் களமிறங்கினர். 2-வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் கீரின் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார் .

அடுத்து வந்த பிஞ்ச் 15 ஓட்டங்களிலும் மேக்ஸ்வெல் 1 ஓட்டங்களிலும் வெளியேறினார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் அரை சதம் அடித்தார். அவர் 75 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார். அவர் 20 பந்தில் 42 ஓட்டங்கள் குவித்தார் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் கைல் மேயெர்ஸ் 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.பின்னர் ஜான்சன் சார்ல்ஸ் ,பிரண்டன் கிங் இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர். பிரண்டன் கிங் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நிக்கோலஸ் பூரான் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஜான்சன் சார்ல்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்தனர். பின்னர் மேற்கிந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் 147 இழப்பிற்கு ஓட்டங்கள் எடுத்தது.இதனால் ஆஸ்திரேலிய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் 2-0 என தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது