இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்-பா .உ செல்வம் அடைக்கலநாதன்.

இப்பிரேரணையில் பயங்கரவாத்தடைச்சட்டம் உள்ளிட்ட சில விடயங்களில் நாம் எதிர்பார்த்ததைப்போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றை அரசாங்கம் உரியவாறு நடைமுறைப்படுத்துமா என்பதும் அல்லது இப்பிரேரணையில் உள்ள விடயங்களை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுமா என்பதும் சந்தேகத்திற்குரிய விடயங்களாகவே காணப்படுகின்றன என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

எமது மக்கள் நீதியைப்பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் மீதே நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எனவே அதற்கேற்றவாறு இணையனுசரணை நாடுகள் செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் ஏனைய உறுப்புநாடுகளும் வலியுறுத்தவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.