மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஏனைய முஸ்லிம் நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து அமெரிக்கா பாராட்டுவதாக இலங்கையின் முஸ்லிம் வாலிபர் அமைப்பினருடனான சந்திப்பின் போது ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இளம் சமூகத்தினர் நாட்டின் அமைதி, ஒன்றிணைந்த சுபீட்சத்தின் நோக்கிற்காக செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் உண்மையை உரக்கப் பேசுவதாகவும் சட்டவாக்கத்தை பாதுகாப்பதற்காக முன்நிற்பதை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பாராட்டியுள்ளார்.