இங்கிலாந்து மகாராணி எலிசபெத் காலமானார்.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்க்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் இன்று  தனது 96 வயதில் உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக இயற்கை எய்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1952 இல் அரியணைக்கு வந்த மஹாராணி  மகத்தானபிரித்தானியாவை உருவாக்கியவராக  சமூக மாற்றத்தைக் கண்டவராக போற்றப்படுகிறார்.

அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரும் அவரது மூத்த மகனுமான  சார்லஸ், புதிய அரசராகவும், 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்  பிரிட்டனை பெருமைப்படுத்திய ‘தன்னலமற்ற’ ராணி என்றும் தனது குடும்பத்தையும் ஐக்கிய இராச்சியத்தையும் அசாதாரண சமூக மாற்றங்களின் மூலம் வழிநடத்தினார் எனவும் கூறப்படும் அதேவேளை அவரது சாதனை முறியடிக்கும் ஆட்சியின் மூலம் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டினார் எனவம் நம்பப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து பல தசாப்தங்களாக பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தேசிய பெருமையின் சின்னமாக விளங்கினானா என்றும் இதன் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியால் அவர் உலகம் முழுவதும் மதிக்கப்பட்டார்

அர்ப்பணிப்புள்ள மனைவியாக தாயாக, பாட்டியாக மற்றும் கொள்ளுப் பாட்டியாக அவர் தனது  ஆட்சி முழுவதும் தனது நாடு மற்றும் காமன்வெல்த் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். அவரது அமைதியான, கட்டுக் கோப்பான நடத்தை அவரது குடும்பத்தையும் ஐக்கிய இராச்சியத்தையும் மேன்மையுற வைத்தது. இது முடியாட்சியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் பலருக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.