இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி.

ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற  பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்கினர். சர்மா 28 ஓட்ட்ங்களிலும் , ராகுல் 28 ஓட்ட்ங்களிலும் வெளியேறினர். அடுத்துவந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 60  ஓட்ட்ங்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்ட்ங்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 182 ஓட்ட்ங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர்.

பாபர் அசாம் 14 ஓட்ட்ங்கள்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பகர் சமான் 15 ஓட்ட்ங்கள்களில் வெளியேறினார். ஆனால், அடுத்துவந்த முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவாஸ் 20 பந்துகளில் 42 ஓட்ட்ங்கள் குவித்து வெளியேறினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ஓட்ட்ங்கள் குவித்து வெளியேறினார். இறுதியில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ஓட்ட்ங்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.