போதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்தின் பெண் பிரதமர்

பின்லாந்தின் ஆளும் ஜனநாயக சமூக கட்சியின் பிரதமராக இருப்பவர் சன்னா மரீன். 2019 ஆம் ஆண்டில் தனது 34 வயதில் பிரதமர் பதவி ஏற்று உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமை பெற்ற பெண் இவர்.

தனது அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் மது விருந்தில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பின்றி இருப்பதாக சன்னா மரீனாவுக்கு கண்டனமும் விமர்சனமும் குவிந்து வருகிறது. இந்நிலையில் பார்ட்டியில் மதுவை தவிர வேறு போதை பொருட்களை பயன்படுத்தவில்லை எனவும், நடனமாடியது, பார்ட்டி செய்தது எல்லாம் சட்டப்படியான விஷயங்கள் என்றும் சன்னா மரீன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இவர் போதைமருந்து பரிசோதனை எடுக்க வேண்டும் என அந்நாட்டின் தலைவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். பிரதமர் சன்னா மரீன் சர்ச்சையில் சிக்குவது முதல் முறை அல்ல. கடந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் நைட் கிளப் சென்று பார்ட்டியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார் சன்னா மாரின். கடந்த டிசம்பர் மாதம் இரவில் கிளப்பில் பார்ட்டிக்கு சென்று விடிய விடிய பார்ட்டி செய்தார் மாரின்.

அந்த நேரத்தில் அவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த விவரத்தையும் மறைத்தது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். 2019ஆம் ஆண்டில் நாட்டின் இளம் பிரதமரான இவர் நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் “பிரதமருக்கு தகுதியானவர் அல்ல” என்று எதிர்க்கட்சிகள் விமரசனம் செய்தனர். மேலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும் எதிர்கட்சியின் தலைவரான ரிக்கா புர்ரா, மாரின் போதைப்பொருள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார். ஆனால் 36 வயதானசன்னா மாரின் போதைப்பொருள் உட்கொண்டதாக கூறப்படுவதை மறுத்தார், அவர் மது மட்டுமே அருந்தியதாக கூறினார்.

வீடியோக்கள் தனது குழுவில் மட்டுமே பகிரப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் பொதுவில் பகிரப்பட்டு விட்டது. நான் மாலை நேரத்தை நண்பர்களுடன் கழித்தேன். விருந்தில் ஆடினேன், பாடினேன் -அனைத்தும் சட்டப்படியான விஷயங்கள்.

தனக்கு போதைபொருள் சோதனைகள் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்றும், தனது நடத்தையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.