முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் இருப்பதாக கூறினார்.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என செய்திகள் வெளியாகிய நிலையில் அரசாங்கம் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் கூறியுள்ளார்.